நீரிழிவு நோய் ஆய்வக சோதனைகள்
—-----------------------------------------------------------
சிறுநீரில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இரத்தச் சர்க்கரையின் அளவுகள் மூலம் ஆய்வகங்கள் நீரிழிவு நோயின் தீவிரத்தை கணக்கிடுகின்றனர்.
உண்ணாநிலையில் (Fasting) இரத்த குளுக்கோஸ் சோதனையே தற்போது நீரிழிவு நோய்க்கான முக்கிய சோதனையாக முன்னுக்கு வந்துள்ளது.
உண்ணாநிலை ஊன்மநீர் (பிளாஸ்மா) குளுக்கோஸ் மதிப்பு 126 mg/dl ஐ விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருப்பது நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளதை குறிக்கிறது.
நீரிழிவு நோய் அளவிட 'வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை' (oral glucose tolerance) சோதனை என்ற ஒரு சோதனையும் உள்ளது. குறிப்பிட்ட சூழலில் மருத்துவர்கள் இந்த சோதனையை தேர்வு செய்யக்கூடும்.
இந்தப் பரிசோதனையின்போது குளுக்கோஸ் அளவு 200 mg/dlக்கு அதிகமாகவோ அல்லது அதற்குச் சமமாகவோ இருந்தால் அது நீரிழிவு நோய் நிலையை உறுதிப்படுத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளின்படி இந்த வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை
சோதனையை செய்கின்றனர். 75 கிராம் உலர் (anhydrous அன்ஹைட்ரஸ்) குளுக்கோஸை தண்ணீரில் கரைத்து பருகச்சொல்லப்படுகிறது. பின்னர் 2 மணி நேரம் கழித்து ஊன்மநீர் (பிளாஸ்மா) குளுக்கோஸின் செறிவு அளவிடப்படுகிறது. மருத்துவர்களின் வழிகாட்டுதலில் மட்டுமே இவை மேற்கொள்ளப்படுகின்றன.
நீரிழிவு நோய் கண்டறிய மேற்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
-கோவை இயற்கை நலவாழ்வகம்